/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/south-africa.jpg)
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி அக்.5 தொடங்கி நடைபெற்று வருகிறது.நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
அந்த வகையில், டெல்லியில் இன்று நடைபெற்ற 4வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய தென் ஆப்பிரிக்க அணி ரன்களை குவித்தது.குயிண்டன் டி காக் 100 ரன்கள், வாண்டர் உசேன் 108 ரன்கள், ஏய்டென் மார்கரம் 106 ரன்கள் என 3 சதங்களை தென் ஆப்பிரிக்க அணியினர் அடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 428 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
இதையடுத்து 429 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 76 ரன்களும், சரித் அசலங்கா 79 ரன்களும், தசுன் ஷனகா 68 ரன்களும் எடுத்தனர். இந்நிலையில் 44.5 ஓவர்கள் முடிவில் 326 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது தோல்வியைச் சந்தித்தது. இதன்மூலம் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)