Women's Asia Cup.. Test with Pakistan today

வங்க தேசத்தில் பெண்களுக்கான ஆசியகோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா இலங்கை உட்பட 7 அணிகள் பங்கேற்கின்றன.

Advertisment

இதில் இன்று நடக்கும் 13ஆவது லீக் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்ளுகிறது. தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரில் கம்பீரமாக இந்திய அணி வலம் வருகிறது. மறுபுறம் தனது கடைசி போட்டியில் தாய்லாந்துடன் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இன்று வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்குகிறது.

Advertisment

சர்வதேச டி20 போட்டியில் இரு அணிகளும் இது வரை 12 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 முறை இந்திய அணியும் பாகிஸ்தான் இரண்டு முறையும் வெற்றி பெற்றுள்ளது.

பிற்பகல் ஒரு மணிக்கு துவங்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் செய்ய இருக்கிறது.

இந்திய அணி வீராங்கனைகள் விவரம்- ஸ்மிருதி மந்தனா, சப்பினேனி மேகனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கவுர், தயாளன் ஹேமலதா, ரிச்சா கோஷ், தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ராஜேஸ்வரி கயக்வாட்

பாகிஸ்தான் அணி வீராங்கனைகள் விவரம் - முனீபா அலி, சித்ரா அமீன், பிஸ்மா மரூப், நிதா தார், ஆயிஷா நசீம், அலியா ரியாஸ், ஒமைமா சோஹைல், அய்மான் அன்வர், சாடியா இக்பால், துபா ஹாசன், நஷ்ரா சந்து