Wedding gifts given to cricketer KL Rahul

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும், அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும் இருந்து வருகிறார் கே.எல். ராகுல். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும் கே.எல். ராகுலும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 23 ஆம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் இரு வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர்.

Advertisment

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமண வாழ்த்து தெரிவித்துரூ.2.17 கோடி மதிப்பிலான பி.எம்.டபில்யூகாரை பரிசளித்துள்ளார். அதியா ஷெட்டியின் தந்தை சுனில் ஷெட்டி மும்பையில் ரூ.50 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றினை பரிசாக அளித்துள்ளார்.

Advertisment

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் ராகுலுக்கு ரூ.80 லட்சம் மதிப்பிலான கவஸாகி நிஞ்சா பைக்கினை பரிசாக அளித்துள்ளார். அதேபோல் பாலிவுட் நடிகர் சல்மான் கான் ரூ.1.64 கோடி மதிப்பிலானஆடி காரையும் ஜாக்கி ஷெராப் 30 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வாட்சையும்பரிசாக அளித்துள்ளனர். பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் ரூ.1.5 கோடி மதிப்பிலான வைர வளையலைஅதியா ஷெட்டிக்கு பரிசாக அளித்துள்ளார்.