Skip to main content

‘தோற்றாலும் ராஜா...’ - வரலாற்று சாதனை படைத்த வார்னர்; சென்னை அபார வெற்றி

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

Warner made history; Big win for Chennai

 

16 ஆவது ஐபிஎல் தொடரின் 67 ஆவது லீக் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

முதலில் களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 223 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக கான்வே 87 ரன்களையும் ருதுராஜ் 79 ரன்களையும் துபே 22 ரன்களையும் எடுத்தனர். டெல்லி அணியில் நோர்ட்ஜே, சகாரியா, கலீல் அஹமது ஆகியோர் தலா 1 விக்கட்டை வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. அதிகபட்சமாக வார்னர் 86 ரன்களை எடுத்தார். சிறப்பாக பந்துவீசிய சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்களையும் தீக்‌ஷனா, பதிரானா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். தேஷ்பாண்டே, ஜடேஜா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

 

ஐபிஎல் தொடரில் ஒரு சீசனில் அதிகமுறை 500 ரன்கள் எடுத்த பட்டியலில் டேவிட் வார்னர் முதலிடத்தில் உள்ளார். இவர் 7 சீசன்களில் 500 ரன்களை தாண்டியுள்ளார். விராட் கோலி 6 முறையும் ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் தலா 5 முறையும் 500 ரன்களை கடந்துள்ளனர்.