Published on 31/07/2021 | Edited on 31/07/2021

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23 ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.
மேலும் பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்தநிலையில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான 69 - 75 எடைப்பிரிவு குத்துச்சண்டை காலிறுதி போட்டியில் இந்தியாவின் பூஜா ராணி, சீனாவின் லி கியானிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளார்.