இந்தியா நியூஸிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் நடைபெற்றுவருகிறது. 157 ரன்களுக்கு நியூஸிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை தொடர்ந்து 158 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி விளையாட தொடங்கியது. ரோஹித் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்திய அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மாலை நேர வெயில் நேராக வீரர்களின் கண்களில் பட்டு சரியாக விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆட்டம் தற்போது தற்காலிகமாக நிறுத்தபட்டது. இந்திய அணியின் கிரிக்கெட் வரலாறிலேயே வெயில் காரணமாக ஒரு ஆட்டம் பாதியில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
வெயில் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா நியூஸிலாந்து ஆட்டம்...
Advertisment