ஸ்டீவன் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை அவரது தந்தை குடோனுக்குள் தூக்கி வீசும்
காட்சிகள் வெளியாகியுள்ளன.
தென் ஆப்பிரிக்கா உடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஆஸி அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இந்தக் குற்றத்தில் மூளையாக செயல்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் பந்தை சேதப்படுத்திய பான்கிராஃப்டுக்கு கடும் தண்டனை விதித்தது ஐசிசி. அதேபோல், வார்னர் மற்றும் ஸ்மித்துக்கு ஓராண்டு மற்றும் பான்கிராஃப்டுக்கு ஒன்பது மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடைவிதித்து உத்தரவிட்டது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
இதையடுத்து, சிட்னியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்மித், ‘நடந்த தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நான் செய்த தவறு இந்த நாட்டு மக்கள், கிரிக்கெட் ரசிகர்கள் என அனைவரையும் பாதித்துவிட்டது. இந்தப் பேரழிவை ஏற்படுத்தியதற்காக என்னை மன்னித்துவிடுங்கள்’ என கண்ணீர் மல்க பேட்டியளித்தார்.
Steve Smith's Father Peter Smith Dumps His Cricket Kit pic.twitter.com/O7WArgbEZT
— Desi Stuffs (@DesiStuffs) March 31, 2018
இந்நிலையில், ஸ்டீவன் ஸ்மித்தின் நடவடிக்கைகளில் விரக்தி ஏற்பட்ட அவரது தந்தை பீட்டர் ஸ்மித், ஸ்டீவன் ஸ்மித்தின் கிரிக்கெட் உபகரணங்களை எடுத்துக் கொண்டுபோய் பழைய பொருட்கள் வைக்கும் குடோனில் வீசும் காட்சிகள் வெளியாகின. அப்போது அவர் ‘ஸ்மித் சரியாகிவிடுவான்.. அவன் மீண்டுவருவான்’ என தெரிவித்தார்.