Skip to main content

அப்போதும் அந்த எண்ணம் இல்லை, இப்போதும் இல்லை; சேவாக் அதிரடி கருத்து...

Published on 09/02/2019 | Edited on 09/02/2019

 

ytututu

 

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் 70 தொகுதிகளில் திரை பிரபலங்களையும், விளையாட்டு பிரபலங்களையும் வேட்பாளர்களாக நிறுத்த பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் முன்னாள் இந்திய அணி அதிரடி வீரர் சேவாக் பாஜக சார்பில் ஹரியானாவின் ரோத்தக் தொகுதியில் போட்டியிட போவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தந்து கருத்தை பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், '2014-ம் ஆண்டும் இதே வதந்திதான் வந்தது. தற்போதும் அப்படிதான் உலா வருகிறது. இதில் புதுமை எதுவுமில்லை. துளியும் உண்மையும் இல்லை.  அப்போதும் தேர்தலில் போட்டியிடவில்லை. இப்போதும் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை' என கூறியுள்ளார். கடந்த வாரம் மலையாள நடிகர் மோகன்லாலும் அவர் பாஜக சார்பில் போட்டியிடுவதாக வந்த செய்தியை மறுத்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்