RR vs LSG ipl live score update sanju samson plays captain knock

ஐபிஎல் 2024 இன் 4ஆவது லீக் ஆட்டம் லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையே மாலை தொடங்கியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர்களம் இறங்கினர்.பட்லர் 11 ரன்களில் ஆட்டம் இழந்து ஏமாற்றினார். அதைத் தொடர்ந்து அதிரடியாய் ஆடிக்கொண்டிருந்த ஜெய்ஸ்வாலும் 24 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

Advertisment

பின்பு கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ரியான் பராக் இணை அணியை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக விளையாடிய ரியன் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 5 ரன்களில் வெளியேறினார். ஒருபக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுபக்கம் பொறுமையாக அதே நேரத்தில் தேவையான நேரத்தில் அதிரடி காட்டி ஆடிய சஞ்சு சாம்சன் அரை சதம் கடந்தார். அடுத்து வந்த ஜுரேல் தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்தார்.

Advertisment

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 193ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். லக்னோ அணி தரப்பில் நவீன் 2 விக்கெட்டுகளும், மொஹ்சின் கான் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். 194ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி அடுத்து களமிறங்க உள்ளது.