16 ஆவது ஐபிஎல் சீசனின் 53 லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்க்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்க்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக தவான் 57 ரன்கள் எடுத்தார். சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா அணியில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்களையும் ஹர்ஷித் ரானா 2 விக்கெட்களையும் சுயாஷ் சர்மா நிதிஷ் ராணா தலா ஒரு விக்கெட்களையும் எடுத்தனர்.
180 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 182 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இறுதிப் பந்தில் 2 ரன் தேவைப்பட்ட நிலையில் ரின்கு சிங் பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார். அதிகபட்சமாக நிதிஷ் ரானா 51 ரன்களையும் ரஸல் 42 ரன்களையும் எடுத்தனர். பஞ்சாப் அணியில் ராகுல் சாஹர் 2 விக்கெட்களையும் ஹர்ப்ரீட் ப்ரார், நாதன் எல்லிஸ் தலா 1 விக்கெட்களையும் எடுத்தனர்.
இந்த போட்டியில் அர்ஸ்தீப் சிங் முதல் 3 போட்டிகளில் பவர் ப்ளேவில் 5 விக்கெட்களைக் கைப்பற்றிய நிலையில் அடுத்த 8 போட்டிகளில் பவர்ப்ளேவில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார்.