இந்தியாவை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது மற்றொரு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இந்தியாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

pakistan cricketer hasan ali to marry indian girl on august

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளரான ஹசன் அலி, இந்தியாவின் ஹரியானவை சேர்ந்த ஷாமியா அர்ஜு என்ற பெண்ணை மணமுடிக்க உள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. ஹரியானவை சேர்ந்த ஷாமியா, இங்கிலாந்தில் பொறியியல் படித்துவிட்டு, தனியார் விமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

Advertisment

இவரது பெற்றோர் துபாயில் வசித்து வரும் நிலையில், விரைவில் இவருக்கு ஹசன் அலியுடன் திருமணம் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹசன் அலி குடும்பத்தினரும், ஷாமியா அர்ஜு குடும்பத்தினரும் துபாயில் சந்தித்துப் பேசியநிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதி துபாயில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.