Skip to main content

வாய்ப்பை இழந்த பாக்! நியூஸியை எதிர்கொள்ளும் இந்தியா! 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

Pak missed the chance! India facing Newsi!

 

உலகக் கோப்பை லீக் போட்டியின் 43வது லீக் ஆட்டம் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கொல்கத்தா மாநிலம், ஈடன் கார்டனில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்களான டேவிட் மாலன் 39 பந்துகளில் 31 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோவ் 61 பந்துகளில் 59 ரன்களையும் குவித்து தங்களது விக்கெட்களை இழந்தனர். இதனைத் தொடர்ந்து ஆடிய ரூட் 72 பந்துகளில் 60 ரன்களை எடுத்து தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டோக்ஸ் 76 பந்துகளில் 84 ரன்களை குவித்தார். ஏனைய வீர்கள் 30 ரன்களுக்குள்ளாகவே ஸ்கோர் செய்தனர். அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 337 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணியில் எந்த வீரரும் சதம் அடிக்காமலே 337 ரன்கள் குவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

பாகிஸ்தான் பந்துவீச்சை பொறுத்தவரை, ஷகீன் அஃப்ரிடி 2 விக்கெட்களையும், மொஹமது வாசீம் 2 விக்கெட்களையும், அஹமது ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஹரிஸ் ரவூஃப் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 

 

இந்தப் போட்டியில், 6.2 ஓவர்களில் 338 இலக்கை அடைந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் எனும் நிலை இருந்தது. ஆனால், பாகிஸ்தான் அணி 6.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிறகு 30 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி அரை இறுதி வாய்ப்பை இழந்தது. 

 

இதன் மூலம் தற்போது, இந்தியா, தென் ஆப்பிரகா, ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. மேலும், நவம்பர் 15ம் தேதி மும்பையில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் ஒரு அரை இறுதி போட்டியிலும், நவம்பர் 16ம் தேதி கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மற்றொரு அரை இறுதி போட்டியிலும் மோதுகின்றன. இந்தப் போட்டிகளில் வெற்றி பெரும் இரு அணிகள் குஜராத் மாநிலம், அஹமாத்பாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டியில் மோதும்.