Published on 16/10/2018 | Edited on 16/10/2018

என்ன 571 ரன்கள் வித்தியாசமா என ஆச்சர்யமாக பார்க்கலாம். ஆனால் அதுதான் உண்மை. ஆஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் பெண்கள் கிரிக்கெட் போட்டியில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் (northen districts) அணி, போர்ட் அடிலெய்ட் (port adelaide) ஆகிய அணிகள் மோதின. இதில் நாதெர்ன் டிஸ்ட்ரிக்ட்ஸ் அணி 50 ஓவரில் 596 ரன்கள் எடுத்தது. மொத்தம் 3 சிக்ஸ்கள், 64 ஃபோர்கள் அடித்துள்ளனர். 88 எக்ஸ்ட்ரா ரன்களை கொடுத்தது எதிரணி. இதன்மூலம் 3 விக்கெட்கள் இழப்பிற்கு மொத்தம் 596 ரன்களை எடுத்தது. அடுத்து விளையாடிய ஃபோர்ட் அடிலெய்ட் அணி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.