சமீபத்தில் நடந்துமுடிந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகளப் போட்டிகளில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில், முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்தவர் 18 வயது இளம்பெண் ஹிமா தாஸ்.

Advertisment

Nipon

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இவரது பயிற்சிகளில் உறுதுணையாக இருந்து, வெறும் 18 மாதங்களில் சர்வதேசப் போட்டிகளுக்காக ஹிமா தாஸைத் தயார் செய்தவர் அவரது பயிற்சியாளர் நிப்பான் தாஸ். இதனால், நாடு முழுவதும் நிப்பான் தாஸுக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்நிலையில், அவரிடம் பயிற்சி மேற்கொண்டு வந்த இளம்பெண், அவர்மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். சாருசஜாய் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின்போது நிப்பான் தாஸ் தன்னிடம் தவறாக நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டினை திட்டவட்டமாக மறுத்துள்ளார் நிப்பான் தாஸ். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில், என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. பாலியல் குற்றச்சாட்டு சுமத்தும் பெண் தொடர்ந்து என்னிடம் பயிற்சியில் கலந்துகொண்டார். இதில் தவறு யார்மீது இருந்தாலும் அவர் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நான் எந்தத் தவறையும் செய்யவில்லை; ஒழுக்கமானவனும் கூட. என்னிடம் பயிற்சி பெறும் மாணவர்களிடம் கேட்டுப்பாருங்கள். காவல்துறையின் விசாரணையில் முழுமையாக ஒத்துழைப்பு தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

Advertisment