நியூசிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக கைப்பற்றிய முதல் அணி இந்திய அணி ஆகும்.
நியூசிலாந்தில் மவுண்ட் மாங்கனுவில் டாஸ் வென்று முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 163/3 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் அதிக பட்சமாக ரோஹித் சர்மா 60 ரன்கள் குவித்து தசைப்பிடிப்பால் வெளியேறினார். மேலும் கே.எல். ராகுல் 45, ஸ்ரேயஸ் 33 ரன்கள் சேர்ந்தன. அதேபோல் பும்ரா 3, சைனி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 52, டிம் செய்ஃபெர்ட் 50 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டிகளில் தொடர் நாயகனாக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.