pak and nz practicing

நியூசிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று ஒரு நாள் மற்றும் ஐந்து இருபது ஓவர் போட்டிகளில் விளையாடப் பாகிஸ்தானுக்கு வந்திருந்தது. மேலும் இந்த தொடரின் முதல் போட்டியாக நடைபெற இருந்து ஒருநாள் ஆட்டத்தில், இன்று பாகிஸ்தானும் நியூசிலாந்தும் மோதவிருந்தன.

Advertisment

இந்தநிலையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம், பாதுகாப்பு காரணங்களால் நியூசிலாந்து அணி தனது பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. இரு அணிகளுக்குமிடையேயான போட்டி தொடங்குவதற்குச் சற்று முன்னதாக இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Advertisment

தங்கள் நாட்டு வீரர்களுக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக நியூசிலாந்து அரசு, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தை எச்சரித்ததையடுத்து, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைக் கைவிடும் முடிவை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.