Skip to main content

எனது சிறிய கனவு நனவாகியுள்ளது - பெற்றோருடனான விமான பயணத்திற்கு பிறகு உருகிய நீரஜ் சோப்ரா!

 

NEERAJ CHOPRA

 

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வரலாற்றுச் சாதனைப் படைத்தார். ஈட்டி எறிதலில் அவர் வென்ற தங்கம்தான், சுதந்திரத்திற்குப் பிறகு தடகளத்தில் இந்தியா வென்றுள்ள முதல் தங்கமாகும்.

 

நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துகள் குவிந்தது. மேலும் அவருக்குப் பாராட்டு விழாக்களும் நடைபெற்றது. இந்தநிலையில் தனது பெற்றோரை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டுமென்ற தனது கனவை நீரஜ் சோப்ரா நிறைவேற்றிக்கொண்டுள்ளார்.

 

தனது பெற்றோருடன் விமானத்தில் பறக்கும் புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பகிர்த்துள்ள நீரஜ் சோப்ரா, தனது சிறிய கனவு நனவாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். 


 

இதை படிக்காம போயிடாதீங்க !