Skip to main content

என்னைப் பொறுத்தவரை நீங்கள்தான் தொடர் நாயகன்! - நடராஜனை புகழ்ந்த பாண்ட்யா!

Published on 08/12/2020 | Edited on 09/12/2020

 

kl


இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டியில் விளையாடி இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை இழந்தது. 

 

அடுத்து ஆஸ்திரேலியாவோடு டி20 போட்டியில் களம் கண்ட இந்திய அணி, 2-1 என்ற அடிப்படையில் தற்போது தொடரை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில், 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்த தொடரில் ஆட்ட நாயகன் விருதை, ஆல் ரவுண்டர் பாண்ட்யா பெற்றுள்ளார். விருதைப் பெற்ற அவர், அதனை தமிழக வீரர் நடராஜன் கையில் கொடுத்து மகிழ்ந்தார். இதுதொடர்பாக, ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், "என்னைப் பொறுத்த வரையில், நீங்கள்தான் தொடர் நாயகன், அதற்கான தகுதிகள் அனைத்தும் உங்களுக்கு இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அதற்காகவாவது நான் பணம் வாங்கியாக வேண்டும்” - மைதானம் குறித்து மனம் திறக்கும் நடராஜன்

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

Natarajan spoke about the stadium he built

 

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

 

இதில் கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், வருண் சக்கரவர்த்தி போன்றோர் கலந்து கொண்டனர். சினிமா நட்சத்திரம் யோகிபாபுவும் இவ்விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடராஜன், “2010 ஆம் ஆண்டு நாங்கள் பேசிக்கொண்டு இருந்த கனவு நினைவாகும் போது மிக ஆச்சர்யமாக உள்ளது.  மிக பெருமையாக உள்ளது. இங்கிருந்து அதிகமான வீரர்களை உருவாக்கி அனுப்ப வேண்டும். 

 

கிரிக்கெட் பிரபலங்கள் அதிகமானோர் வந்துள்ளார்கள். என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு தருணம். 14 வயது முதல் 19 வயதுடையவர்களில் 30 பேரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்கள் தான் இன்னும் அதிகமாக கற்றுக்கொள்ள முடியும். இது இலவசமாக செய்யவில்லை. கட்டணம் வசூலிக்கிறோம். இது எனக்காக நான் செய்து கொள்ளவில்லை. இங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும். மைதானத்தை பராமரிப்பது எவ்வளவு கடினம் என உங்களுக்கே தெரியும். அதற்காகவாவது பணம் வாங்கியாக வேண்டும்” என்றார்.

 

 

 

Next Story

"கடவுள் ஆசீர்வாதத்தால் கண்டிப்பா எனது ஆசை நடக்கும்" - நடராஜன் விழாவில் யோகி பாபு

Published on 23/06/2023 | Edited on 23/06/2023

 

yogi babu press meet at natarajan cricket ground launch

 

கிரிக்கெட் வீரர் நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார். 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரில் செயல்படவுள்ள இந்த மைதானத்தின் தொடக்க விழா இன்று சிறப்பாக நடைபெற்றது. 

 

சிறப்பு விருந்தினராக வருகை தந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவரோடு நடிகர்கள் யோகி பாபு, புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த யோகி பாபு, "தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்களுக்கு ஊக்கம் கொடுக்க ஆளில்லாமல் நிறைய விஷயங்கள் நடந்திருக்கு. அது காலம் காலமாக நடந்துக்கிட்டு வருவது தான். ஆனால் இப்போது முதல் முறையாக நடராஜன் வளர்ந்து வர கிரிக்கெட் வீரர்களுக்கு பெரிய சப்போர்ட் பண்ணியிருக்கார். இதன் மூலம் நிறைய வீரர்கள் வரவேண்டும் என்பது எனது ஆசை. 

 

இந்த மைதானத்தை பார்க்கும் போது நாமும் இதுபோன்று ஒரு மைதானம் உருவாக்கி நிறைய பேரை உருவாக்கணும்னு தோன்றுகிறது. கண்டிப்பா இந்த ஆசை கடவுள் ஆசீர்வாதத்தில் நடக்கும் என நம்புகிறேன். நானும் அடுத்ததாக கிரிக்கெட்டை மையப்படுத்தி தான் ஒரு படம் பண்ணவுள்ளேன். அதனை 'பொம்மை நாயகி' பட இயக்குநர் தான் இயக்குகிறார்" என்றார்.