நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் சிறப்பாக விளையாடிய இந்தியா தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

kohli statement about fans booing smith

Advertisment

Advertisment

இந்த ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது அங்கிருந்த ரசிகர்கள் ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை பந்து சேதப்படுத்தியது குறித்து கிண்டல் அடித்து முழக்கமிட்டனர். அப்போது இதனை பார்த்த கோலி அங்கிருந்த ரசிகர்களிடம் ஸ்மித்தை கிண்டல் செய்வதற்கு பதிலாக வீரர்களை உற்சாகப்படுத்தி ஆட்டத்தை ரசியுங்கள் என்பது போல செய்கையால் கூறினார். இதனையடுத்து அங்கிருந்த ரசிகர்கள் ஸ்மித்தை கிண்டல் செய்த கோஷங்களை விடுத்து, வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சத்தமிட்டனர். இதனையடுத்து ஸ்மித், கோலிக்கு நன்றி கூறினார்.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோலி, "அவரை அப்படி கிண்டல் செய்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கு முந்தைய ஆட்டங்களிலும் இப்படி நடந்தது. இதற்காக நான் வருந்துகிறேன். நேற்றைய ஆட்டத்தில் நானே அவரிடம் சென்று ரசிகர்களின் சார்பாக மன்னிப்பும் கேட்டேன். ஒரு வீரரை ஒவ்வொரு முறையும் இப்படி கிண்டல் செய்வதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்திய ரசிகர்கள் எப்போதும் தவறான உதாரணமாக அமைந்துவிட கூடாது" என தெரிவித்தார்.