![Kevin Pietersen](http://image.nakkheeran.in/cdn/farfuture/o07oVJ8pJI454MxSfKUehRTjDrNI-qWAFsY9lUWAyyo/1600078642/sites/default/files/inline-images/pietersen-final.jpg)
13-வது ஐபிஎல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை அணி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அனைத்து அணி வீரர்களும் உற்சாகமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் மூத்த வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான பீட்டர்சன் இந்த தொடரில் கோப்பையை வெல்வதில் யாருக்கு வாய்ப்பு அதிகம் என்பது குறித்து கணித்துள்ளார்.
இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதள பதிவில், "இந்த நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டு, கிரிக்கெட் தொடர் நடக்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஐபிஎல் தொடரில் பணியாற்றுவது என்பது எப்போதும் எனக்கு உற்சாகம் அளிக்கக்கூடியது. இந்த முறை டெல்லி அணி கோப்பையை வெல்லும் என்று நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் களம் காணுகிறது. அவ்வணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலியா அணியின் மூத்த வீரர் ரிக்கிபாண்டிங் உள்ளார். ஐபிஎல் தொடங்கிய மறுநாளான 20-ம் தேதி டெல்லி அணி தன்னுடைய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.