rohit sharma

இந்தியா-மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்த நிலையில்இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாட இருந்த ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயஸ் ஐயர், மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட நவதீப் சைனி ஆகியோருக்கு கரோனாஉறுதியானது.

Advertisment

இதனைத் தொடர்ந்து மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட மயங்க் அகர்வால், கரோனாவிதிகளின்படி அணியில் சேருவதற்குமுன் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். அதேபோல் கே.எல் ராகுல் முதல்மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை. சகோதரி திருமணம் காரணமாக அவர் முதல் ஒருநாள் போட்டியில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Advertisment

இதன்காரணமாகரோகித் சர்மாவுடன் யார் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்தநிலையில், வேறு வழியே இல்லாததால்தன்னுடன் இஷான் கிஷான்தான்தொடக்க ஆட்டக்காரராக இறங்குவார் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.