
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
அபுதாபியில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் எடுத்தது. பெங்களூரு அணி தரப்பில் அதிகபட்சமாக படிக்கல் 50, டி வில்லியர்ஸ் 35, விராட் கோலி 29 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 60, ஷிகர் தவான் 54 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவினர்.

பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, பெங்களூரு அணிகள் தகுதி:
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு பெங்களூரூ, டெல்லி அணிகள் தகுதி பெற்றுள்ளன.
14 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.14 போட்டிகளில் 7 போட்டிகளில் வென்று பெங்களூரூ ராயல் சாலஞ்சர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.