IPL: Kolkata Knight Riders beat Chennai!

Advertisment

15 ஆவது ஐ.பி.எல். தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

மும்பை வான்கடே மைதானத்தில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சால்11 ஓவர்களில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தவித்த நிலையில், தோனி தனது அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினார். தோனி 38 பந்துகளில் 50 ரன்களுடனும், ஜடேஜா 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

IPL: Kolkata Knight Riders beat Chennai!

Advertisment

அதைத் தொடர்ந்து, 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதனால் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.