IPL Final 2024 Hyderabad team calm game

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (26.05.2024) நடைபெற்று வருகிறது. இறுதி போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும்மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Advertisment

அதன்படி ஹைதராபாத் அணி சார்பாக களமிறங்கிய கேப்டன் கம்மின்ஸ் அதிகபட்சமாக 24 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களான அபிஷேக் சர்மா 2 ரன்களில் போல்ட் அவுட் ஆனார். டிராவிஸ் ஹெட் டக் அவுட் ஆனார். ராகுல் திரிபாதி 9 ரன்களும், நிதிஷ் ரெட்டி அவுட்13 ரன்களும், மார்க்ரம் 20 ரன்களும் ஹென்றிக் கிளசன் 16 ரன்களும் எடுத்தனர்.

Advertisment

இறுதியில் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 113 ரன்கள் குவித்தது. இதன் மூலம் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.