IPL: Delhi beat Mumbai

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டி, மும்பையில் உள்ள பிரபோர்ன் கிரிக்கெட் மைதானத்தில் (Brabourne Stadium) இன்று (27/03/2022) பிற்பகல் 03.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்தது. அதைத் தொடர்ந்து, 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

IPL: Delhi beat Mumbai

Advertisment

மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 81, ரோஹித் சர்மா 41, திலக் வர்மா 22 ரன்கள் எடுத்தனர். டெல்லி கேபிட்டல்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக லலித் யாதவ் 48, அக்சர் படேல் 38. பிரித்வி ஷா 38 ரன்களை எடுத்தனர்.