Skip to main content

ஐ.பி.எல்: கொல்கத்தா அணி வெற்றி!

 

ipl cricket match kolkata knight riders and sunrisers hyderabad team

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் இன்று (11/04/2021) இரவு 07.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்களை எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 80, ராகுல் திரிபாதி 53, தினேஷ் கார்த்திக் 22 ரன்களை எடுத்தனர்.

ipl cricket match kolkata knight riders and sunrisers hyderabad team

 

அதைத் தொடர்ந்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

 

ஹைதராபாத் அணி தரப்பில் முகமது நபி 2, ரஷீத் கான் 2, நடராஜன், புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி தரப்பில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 61 ரன்களை எடுத்தார்.