உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் லிக் ஆட்டத்தில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 410 ரன்களை குவித்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 45 வது லீக் போட்டி இந்தியா - நெதர்லாந்து அணிகளுக்கு இடையே பெங்களுருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்நிலையில் நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 410 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 128 ரன்களை குவித்தார். கே.எல். ராகுல் 102 ரன்களும், ரோஹித் சர்மா 61 ரன்களும், கில், விராட் கோலி ஆகியோர் தலா 51 ரன்களும் எடுத்தனர்.
இந்த போட்டியின் மூலம் ஷ்ரேயாஸ் ஐயர் 50 ஓவர் உலகக்கோப்பையில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கே.எல். ராகுல் 64 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 102 ரன் கள் எடுத்து நடப்பு உலகக் கோப்பை தொடரில் அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். இதன்மூலம் நெதர்லாந்து அணிக்கு இந்திய அணி 411 ரன்களை இலக்காக வைத்துள்ளது.