cfgbn

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. ஆட்டத்தின் மூன்றாவது நாளான இன்று ஆஸ்திரேலியா அணி 151 ரங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவை விட 296 ரன்கள் பின்தங்கியுள்ளது.. மூன்றாம் நாளான இன்று தனது பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா அணி தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக ஆஸ்திரேலியா கேப்டன் பெயின் 22 ரன்கள் அடித்தார். இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 33 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Advertisment