Skip to main content

ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர்!

Published on 06/08/2021 | Edited on 06/08/2021

 

bajrang punia

 

டோக்கியோவில் தற்போது நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டிகளில், இந்தியா சார்பாக பங்கேற்றவர்களில் மீராபாய் சானு பளுதூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் வெண்கலம் வென்றுள்ளார். பி.வி. சிந்து பேட்மிண்டனில் வெண்கலமும், ரவிக்குமார் தஹியா மல்யுத்த போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

 

மேலும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, 41 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றுள்ளது. இந்தநிலையில், தற்போது 65 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, ஈரானின் மோர்டெசா செகா கியாசியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

 

இதன்மூலம் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.