Skip to main content

அணித்தேர்வில் ட்விஸ்ட் வைத்த இந்திய அணி..! - டாஸ் வென்ற இங்கிலாந்து.

Published on 05/02/2021 | Edited on 05/02/2021
indian team

 

 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

 

காயத்தால் ஆஸ்திரேலியா தொடரில் விளையாடாத இஷாந்த் ஷர்மா, அணிக்கு திரும்பியுள்ளார். இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களை களமிறக்கும் எனவும், குல்தீப் யாதவ் விளையாடுவர் எனவும் எதிர்பார்க்கப்ட்ட நிலையில், மூன்றாவது சுழற்பந்து வீச்சளராக ஷாபஸ் நதீம் இடம்பெற்றுள்ளார். ஜஸ்பிரிட் பும்ரா, இந்தியாவில் முதல் டெஸ்ட் போட்டியை ஆடுவது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.