ஆசிய கோப்பை டி20 போட்டி அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாவது லீக் ஆட்டத்தில் நேற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. இதன் காரணமாக நேற்றைய போட்டி பெரும் வரவேற்பை பெற்றது.
இந்தியா பாகிஸ்தானுடன் நேரடியாக விளையாடுவதை நிறுத்தி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. எல்லை தாண்டிய பயங்கரவாதம் தான் இதற்கு காரணம் என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா பாகிஸ்தானுடன் விளையாடியது.
இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில், கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, கோலி உள்ளிட்டோர் ஆட்டமிழக்க கடைசி ஓவரி 7 ரன்கள் தேவைப்பட்டன. அந்த ஓவரின் முதல் பந்தில் ஜடேஜா ஆட்டமிழக்க தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். அவர் இரண்டாவது பந்தில் ஒரு ரன் எடுத்து, ஹர்டிக் பாண்டியா ஸ்ட்ரைக்கு வந்தார். ஹர்டிக் பாண்டியா தான் எதிர்கொண்ட பந்தில் சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறவைத்தார்.
இந்தப் போட்டியை நேரில் காண பி.சி.சி.ஐ. செயலாளரும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷாவு துபாய் மைதானம் சென்றிருந்தார்.
இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற பின் இந்திய ரசிகர்களும், பி.சி.சி.ஐ நிர்வாகிகளும் உற்சாகத்தில் இருந்தனர். பல இந்திய ரசிகர்கள் தேசியக் கொடியை ஆட்டியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். ஜெய்ஷாவும் கை தட்டியபடி நின்று கொண்டிருந்தார். அப்போது ஜெய் ஷாவிடம் அருகில் இருந்த நபர் இந்திய தேசியக் கொடியை கொடுக்கிறார். ஆனால் ஜெய்ஷா, தலையை அசைத்து, வேண்டாம் என்று சொல்கிறார். இது நேற்று போட்டியின் போது லைவில் காட்சிப் படுத்தப்பட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அந்த வீடியோவை அரசியல் பிரபலங்கள் பகிர்ந்து பலர் விமர்சித்து வருகிறார்கள்
Jay Shah seems to have strong influence of his RSS ancestors 👇 pic.twitter.com/FmvF5RVcvI
— YSR (@ysathishreddy) August 28, 2022