இந்தியாவிற்கு சுற்றும் பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நிலையில் ஒரு நாள் தொடர் நேற்று துவங்கியது.
உலகக் கோப்பைக்கு தேர்வான வீரர்கள் நேற்று ஆஸ்திரேலியா புறப்பட்ட நிலையில் ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் நிர்வாகம் முற்றிலும் இளம் வீரர்களை தேர்ந்தெடுத்து இருந்தது. கேப்டனாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
நேற்று துவங்கிய ஒரு நாள் தொடரின் முதல் போட்டி மழையால் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. எனவே போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுமையாக ரன்களை சேர்த்தனர். 22 ரன்களை எடுத்திருந்த நிலையில் மாலன் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மற்றும் மார்க்ரம் சொற்ப ரன்களில் வெளியேற கால்சன் மற்றும் மில்லர் ஜோடி சேர்ந்து ஆட்டத்தின் போக்கை மாற்றினர். 40 ஓவர்களின் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்களை எடுத்திருந்தது. அதிக பட்சமாக தென் ஆப்பிரிக்க அணியில் மில்லர் 75 ரன்களும் க்ளாசன் 74 ரன்களும் எடுத்தனர்.
250 ரன்கள் இழக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற 51 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்களை இழந்திருந்தது. இதன் பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஷ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டது. பொறுமையாக ரன்களை சேர்த்துக் கொண்டிருந்த இந்த ஜோடியில் ஸ்ரேயாஷ் ஐயர் 50 ரன்களுக்கு அவுட்டானார். மறுபக்கம் ஷர்துல் தாக்கூருடன் ஜோடி சேர்ந்த சாம்சன் அதிரடி காட்டினார். எனினும் இந்திய அணி 40 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்களை எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக சாம்சன் 9 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 86 ரன்களை எடுத்திருந்தார்.
ஆட்ட நாயகனாக க்ளாசன் தேர்வு செய்யப்பட்டார்.