Skip to main content

IND vs ZIM : ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
IND vs ZIM : India beat Zimbabwe to record

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

இந்நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (10.07.2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் ருதுராஜ் கெயிக்வாட் 28 பந்துகளில் 49 ரன்களும், ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 183 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. அதன் பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இந்த போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் 4வது போட்டி வரும் 13ஆம் தேதி (13.07.2024) நடைபெற உள்ளது.