Skip to main content

உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்றது நியூசிலாந்து!

Published on 24/06/2021 | Edited on 24/06/2021

 

ICC World Test Championship Final 2021 NEW ZEALAND WON THE CUP

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. 

 

இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டனில் நடந்த இறுதிப் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. பரபரப்பான இறுதி நாள் ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 139 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி கடந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 217 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களும் எடுத்தது. அதேபோல் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 249 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 140 ரன்களும் எடுத்தது. 

 

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிக்கு சுமார் ரூபாய் 12 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இரண்டாம் இடம் பிடித்த இந்திய அணிக்கு ரூபாய் 6 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 

 

ஐ.சி.சி. நடத்திய டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் தொடங்கியது. புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்றன. முதல்முறையாக ஐ.சி.சி. நடத்திய டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் அணியாக நியூசிலாந்து கோப்பையை வென்றது. 

ICC World Test Championship Final 2021 NEW ZEALAND WON THE CUP

'அதே ரிசர்வ் டே, அதே நியூசிலாந்து, அதே தோல்வி'!

மழை பாதிப்பால் டெஸ்ட் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டி ஆறாம் நாளான ரிசர்வ் டே அன்று நடத்தப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஐந்து நாளில் போட்டி முடிந்திருந்தால் இறுதிப் போட்டி டிராவை நோக்கி சென்றிருக்கும். முதல்முறையாக ஆறாம் நாளில் போட்டி நடத்தப்பட்டதால் இந்தியா தோல்வியைத் தழுவி கோப்பையை நழுவவிட்டது. கடந்த 2019- ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி ரிசர்வ் டே அன்று நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. அதேபோல், இங்கிலாந்தில் 2019- ஆம் ஆண்டு ஜூலையில் நடந்த அரையிறுதி போட்டி மழை காரணமாக ரிசர்வ் டே நோக்கி சென்றது. மறுநாள் நடத்தப்பட்ட போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது. மழை, ரிசர்வ் டே, நியூசிலாந்து அணி, மைதானம் என ஐ.சி.சி. தொடரில் இந்திய அணியை தோல்வி துரத்துகிறது. 


  

Next Story

எல்லோருக்கும் 100%.. கில்லுக்கு மட்டும் 115%.. அபராதம் விதித்த ஐசிசி

Published on 12/06/2023 | Edited on 12/06/2023

 

100% for all.. 115% for Subaman Gill.. fined by ICC

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சுப்மன் கில் போலண்ட் வீசிய 8 ஆவது ஓவரில் கேமரூன் க்ரீனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். க்ரீன் தனது இடது கையால் பந்தை பிடித்தாலும் பந்து தரையில் பட்டது போல் காணப்பட்டது. கள நடுவர் மேல்முறையீட்டிற்கு செல்ல மூன்றாம் நடுவர் அவுட் என முடிவு வழங்கினார். இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

 

கடந்த 10 ஆம் தேதி சுப்மன் கில் தனது ட்விட்டர் பதிவில் க்ரீன் பந்தை பிடித்த காட்சியை பதிவிட்டு விமர்சனம் செய்திருந்தார். அதில் பூதக்கண்ணாடியையும் தலையில் அடித்துக் கொள்ளும்படியான எமோஜியையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடுவரின் முடிவை விமர்சனம் செய்ததாக சுப்மன் கில்லுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மெதுவாக பந்து வீசியதாக இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் 100% அபராதமும் ஆஸ்திரேலிய அணிக்கு 80% அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் மூலம் சுப்மன் கில்லுக்கு 115% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Next Story

“ஒன்றை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” - சச்சின் ஆதங்கம்

Published on 11/06/2023 | Edited on 12/06/2023

 

Sachin Tendulkar on India's defeat in World Test Championship

 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 469 ரன்களை குவிக்க இந்திய அணியோ முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தது.

 

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்களை இழந்து 270 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு 444 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் இந்திய அணி கடைசி இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

 

இந்நிலையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து ட்விட்டரில் தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். அதில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள். போட்டியை தங்களுக்கு சாதகமாக அமைக்க ஆட்டத்தின் முதல் நாளிலேயே ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ட்ராவிஸ் ஹெட் இணைந்து வலுவான அடித்தளத்தை அமைத்தனர். இந்திய அணி ஆட்டத்தில் நிலைத்திருக்க முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். ஆனால் அவர்களால் முடியவில்லை. இந்திய அணிக்கு சில நல்ல தருணங்கள் இருந்தன. அவர்கள் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலரான அஸ்வினை பிளேயிங் லெவனில் ஏன் எடுக்கவில்லை? இதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

 

நான் போட்டிக்கு முன்பே சொல்லி இருந்ததன் படி, திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் எப்போதும் டர்னிங் டிராக்குகளை நம்பியிருக்க மாட்டார்கள். அவர்கள் காற்றில் பந்தை திருப்பியும், ஆடுகளத்தின் மேற்பரப்பிலிருந்து பவுன்சரை எடுத்து வந்து மாறுபட்ட பந்துகளை வீசுவார்கள். ஆஸ்திரேலிய அணியின் டாப் 8 பேட்ஸ்மேன்களில் 5 பேர் இடதுகை வீரர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.