hynhy

ஆஸ்திரேலியாவில் வரும் 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஆடவர் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் 24 முதல் நவம்பர் 15 வரை நடைபெற உள்ளது. அதில் அக்டோபர் 24 முதல் நவம்பர் 8 வரை லீக் சுற்றுப்போட்டிகளும், நவம்பர் 11 மற்றும் 12 ஆகிய இருநாட்களும் அரையிறுதிப் போட்டிகளும், நவம்பர் 15 தேதி இறுதிப்போட்டியும் நடைபெறுகிறது. ஒட்டுமொத்தமாக 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் 45 போட்டிகள் நடக்கின்றன. இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப் 2 வில், இந்திய அணியோடு இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் உள்ளன. மேலும் தகுதிச்சுற்றில் வெற்றிபெறும் 2அணிகள் இந்த குரூப்பில் இடம்பெறும். குரூப் 1ல் மேற்கிந்தியத் தீவுகள், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.

Advertisment

இந்திய அணியின் ஆட்ட விபரங்கள்...

அக்டோபர் 24 - இந்தியா - தென் ஆப்பிரிக்கா (பெர்த்)

அக்டோபர் 29 - இந்தியா - தகுதிச்சுற்றில் ஏ பிரிவில் 2 ஆம் இடத்தில்உள்ள அணி. (மெல்போர்ன்)

Advertisment

நவம்பர் 1- இந்தியா - இங்கிலாந்து. (மெல்போர்ன்)

நவம்பர் 5 -இந்தியா - தகுதிச்சுற்றில் பி பிரிவில் முதல் இடத்தில்உள்ள அணி. (அடிலெய்ட்)

நவம்பர் 8 - இந்தியா - ஆப்கானிஸ்தான் (சிட்னி)