Published on 27/07/2021 | Edited on 27/07/2021

2020ம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் கடந்த 23ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் பெற்ற இந்தியா அடுத்த பதக்கத்திற்காக காத்து இருக்கும் நிலையில், மற்ற போட்டியிகளில் வெற்றிபெற்று இந்திய வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று வருகிறார்கள். இந்நிலையில், ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி ஸ்பெயினை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த ஆட்டத்தில் இந்திய அணி அர்ஜெண்டினாவுடன் வரும் 29ம் தேதி மோத உள்ளது.