Skip to main content

‘இனி மாற்று வீரர் பேட்டிங் ஆடலாம், பவுலிங் போடலாம்’- ஐசிசி 

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

கிரிக்கெட்டில் லெவன்ஸில் இருப்பவர் பேட்டிங் ஆடும்போது ஏதேனும் காயம் ஏற்பட்டால் அவர் ரிட்டைர்டு ஹர்ட் செய்யப்படுவார். இறுதியாக அவர் விளையாடும் நிலையில் இருந்தால் பேட்டிங் ஆடலாம். இல்லையெனில் அப்படியே விட்டுவிடலாம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் ஃபீல்டிங் செய்யலாம். ஆனால், பேட்டிங்கோ பவுலிங்கோ செய்ய முடியாது. இது ஐசிசி விதிமுறைகளில் இருக்கிறது.
 

injury

 

இந்த விதிமுறையின் காரணமாக காயப்படும் வீரர் இடம் பிடித்திருக்கும் அணிக்கு சிரமம், சிக்கல்கள் ஏற்படு. இக்கட்டான நிலையில் பந்துவீசவோ, பவுலிங் போடவோ அவருடைய பங்களிப்பு இல்லாமல் போவதால் அவர் சார்ந்த அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்துகிறது.
 

இதனால் தலையில் அடிபட்டு பயங்கர அதிர்ச்சியுடன் பேட்டிங் செய்ய முடியாத நிலைமை ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரருக்கு ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கும் வீரரை பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல் பந்து வீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
 

இந்த பிரச்சனை குறித்து நீண்ட நாட்களாக பரிசீலனை செய்து வந்த ஐசிசி காயம்பட்ட வீரர் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்தால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் பேட்டிங் பவுலிங் போடலாம் என அனுமதி வழங்கியுள்ளது. வருகிற ஆகஸ்ட் 1 முதல் இந்த விதிமுறை அமலுக்கு வருகிறது.