கரோனாபரவல் காரணமாக 2022 ஆம் ஐபிஎல் தொடர் தள்ளி போக வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள்தங்கள் அணியை கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தாண்டுமுதல் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பதால், இரு அணிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில்ஹர்திக் பாண்டியா, ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள அகமதாபாத்தை அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது. இஷான் கிஷானையும் அகமதாபாத் அணி ஒப்பந்தம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் ரஷித் கான், அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு அணிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை ரஷித்கானை ஒப்பந்தம் செய்ய முடியாவிட்டால், மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் ரபாடா ஆகிய இருவரில் ஒருவரை ஒப்பந்தம் செய்ய லக்னோ அணி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. லக்னோ அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் நியமிக்கப்படவுள்ளார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ஷ்ரேயஸ் ஐயரைகொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்து, அவரை கேப்டனாக நியமிக்கவுள்ளதாகவும்கூறப்படுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக மோர்கன் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.