13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கிய இத்தொடரில் இதுவரை 19 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. பல வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெங்களூரு அணியைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் யுகேந்திர சாஹல் கடந்த தொடர்களை விட நடப்புத் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 5 போட்டிகளில் விளையாடியுள்ள யுகேந்திர சாஹல் சிக்கனமாகப் பந்து வீசி 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரான கவுதம் காம்பீர் யுகேந்திர சாஹல் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், "யுகேந்திர சாஹல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ரஷீத் கான், ஆர்ச்சர், சும்மின்ஸ், ரபடா பற்றியே நாம் பேசி வருகிறோம். யுகேந்திர சாஹல் பற்றியும் நாம் பேச வேண்டும். நடப்புத் தொடரில் பெங்களூரு அணிக்கு நல்ல பங்களிப்பை அளித்து வருகிறார். மற்ற வீரர்களைப் பாராட்டும் வேளையில் இவரையும் கொஞ்சம் பாராட்டலாம்" எனக் கூறினார்.