13-வது ஐ.பி.எல் தொடரானது வரும் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. கரோனா தொற்று காரணமாக உலகின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் இவ்வேளையில் ஐ.பி.எல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது, இந்தாண்டு ஐ.பி.எல் தொடரை எப்படியாவது நடத்திவிட வேண்டும் என்று பிசிசிஐ முழுமுனைப்போடு இருந்தது. அதன்படி அறிவிப்புகள் வெளியாகி அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகின்ற நிலையில் அமீரகத்தில் நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடருக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
துபாயில் நடக்கும் ஐ.பி.எல் தொடரில் சென்னை மும்பை டெல்லி உட்பட 8 அணிகள் விளையாடுகின்றன. கொல்கத்தா, பெங்களூர், ஹைதராபாத், ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் தொடரில் விளையாட உள்ளன. 19-ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் சென்னை அணி மும்பை அணியை எதிர்த்து விளையாடுகிறது. செப்டம்பர் 22-ஆம் தேதி ராஜஸ்தான் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாட இருக்கிறது. செப்டம்பர் 25 ஆம் தேதி சென்னை அணி, டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது. செப்டம்பர் 26 ஆம் தேதி கொல்கத்தா ஹைதராபாத் அணி பலப்பரீட்சை, செப்டம்பர் 27 ஆம் தேதி ராஜஸ்தான் மும்பை இடையே போட்டி. செப்டம்பர் 28ல் பெங்களூரு மும்பை அணிகள் பலப்பரீட்சை, செப்டம்பர் 29ல் டெல்லியை எதிர்கொள்கிறது ஐதராபாத். அக்டோபர் 2 ஆம் தேதி துபாயில் நடைபெறும் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்கிறது ஹைதராபாத். அக்டோபர் 3 பெங்களூர் ராஜஸ்தான் அணிகள் மோதல், இரவு போட்டியில் டெல்லி கொல்கத்தா பலப்பரீட்சை. அக்டோபர் 4 மும்பை ஐதராபாத் அணிகள் இடையே மோதல். இரவு போட்டியில் சென்னை யை எதிர்கொள்கிறது பஞ்சாப்.