Skip to main content

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்; இந்திய அணி அபார வெற்றி!

Published on 16/08/2021 | Edited on 16/08/2021

 

England vs India,  2nd Test match at london lords

 

லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி அபார வெற்றி பெற்றது. தனது இரண்டாவது இன்னிங்ஸில் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 151 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

 

முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் குவிந்த இங்கிலாந்து அணி, இரண்டாவது இன்னிங்சில் 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வி அடைந்தது. மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

 

இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளையும், பும்ரா 3, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வித்திட்டனர். 

 

 

Next Story

உலகக் கோப்பை கிரிக்கெட்; வங்காளதேசத்தை வீழ்த்தி இந்திய அணி 4வது வெற்றி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

India's 4th win after defeating Bangladesh at World Cup cricket

 

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.

 

அந்த வகையில், மகாராஸ்டிரா மாநிலத்தில் உள்ள மைதானத்தில் நேற்று (19-10-23) இந்தியா - பங்களாதேஷ் அணிகள் உலகக் கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் மோதின. இந்தப் போட்டியில் பங்களதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ்  அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 256 ரன்களை எடுத்திருந்தது. பங்களாதேஷ் அணியில் அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 66 ரன்களையும், டான்ஷித் ஹசான் 51ரன்களையும் எடுத்தனர். இதன் மூலம் இந்திய அணிக்கு 257 ரன்களை இலக்காக பங்களாதேஷ் அணி நிர்ணயித்தது. இந்த போட்டியில், இந்திய அணியின் வீரரான பும்ரா, சிராஜ் மற்றும் ரவீந்தர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், தாகூர் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைம் எடுத்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, 257 ரன்களை எடுத்தால் என்ற இலக்குடன் இந்திய அணி மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. இந்த போட்டியில் விளையாடிய, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 40 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 48 ரன்களை குவித்து அவுட்டானார். அதன் பின் களமிறங்கிய  சுப்மன் கில் 55 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 55 ரன்களை குவித்து அவுட்டானார். அதன் பின், விளையாடிய விராட் கோலி 97 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடித்து 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 

 

இறுதியில், இந்திய அணி 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழந்து 261 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் இந்தியா இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இந்திய அணி இரண்டவது இடத்தில் நீடிக்கிறது. 

 

 

Next Story

இந்திய மக்களை உளவு பார்க்கும் மோடி அரசு;  வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 31/08/2023 | Edited on 31/08/2023

 

Modi government spying on Indian people

 

140 கோடி இந்திய மக்களின் தரவுகள் மற்றும் தகவல்தொடர்புகளை  மோடி அரசு கண்காணிப்பு கருவிகளை கொண்டு  உளவு பார்த்து வருவதாக லண்டனில் உள்ள ஆங்கில பத்திரிக்கை ஒன்று குற்றச்சாட்டு வைத்துள்ளது.

 

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு, எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய தொழிலதிபர்கள் ஆகியோரின் செல்போனில் இருந்து  அவர்களின் தரவுகளை மோடி அரசு உளவு பார்த்து வருவதாக பரபரப்பு புகார் எழுந்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை இஸ்ரேலில் என்.எஸ்.ஓ நிறுவனம் தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்ப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், அந்த குற்றச்சாட்டை மோடி தலைமையிலான மத்திய அரசு மறுத்துவிட்டது. 

 

இதற்கிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தியின் செல்போனை மோடி அரசு ஒட்டுக்கேட்பதாகவும்,  ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்திருந்தார். மேலும், அப்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிர்க்கட்சியினர் பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து கேள்வி எழுப்பினர். ஆனால், அதற்கு மோடி அரசு பதில் எதுவும் தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தது.

 

இந்த நிலையில், லண்டனில் உள்ள பைனான்ஸ் டைம்ஸ் என்ற ஆங்கில பத்திரிகை ஒன்றில், இந்தியாவில் உள்ள 140 கோடி இந்தியர்களையும் மோடி அரசு உளவு பார்ப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேலை தலைமையாகக் கொண்டு செயல்பட்டு வரும் செப்டியர் மற்றும் காக்னைட் என்ற நிறுவனத்திடமிருந்து மோடி அரசு அதிநவீன உளவுக் கருவி வாங்கியுள்ளது. அந்தக் கருவிகளை கடலுக்கு அடியில் உள்ள கேபிள்கள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்களில் பொறுத்தி மக்களின் தரவுகள் திருடப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது. அதை வைத்து, ஒட்டுமொத்த 140 கோடி இந்திய மக்களின் செல்போன் அழைப்புகள், வாட்ஸ்அப் செய்திகள், குறுந்தகவல்கள், ஈ.மெயில்கள், ஆகிய தரவுகள் திருடப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

 

அதேபோல், பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் இணைய தகவல்கள் முதற்கொண்டு இந்த கருவி முலம் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இஸ்ரேல் நாட்டின் செப்டியர் நிறுவனம் தனது உளவு பார்க்கும் தொழில்நுட்பத்தை  முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ, வோடபோன் ஐடியா, மற்றும் சிங்கப்பூரின் சிங்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.