Skip to main content

20 ஓவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி: ஜோ ரூட், ஸ்டோக்ஸ்க்கு இடமில்லை!

Published on 09/09/2021 | Edited on 09/09/2021

 

england team

 

இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திலும், ஓமன் நாட்டிலும் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இந்த உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று (08.09.2021) அறிவிக்கப்பட்டது.

 

இந்தநிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், 20 ஓவர் உலகக்கோப்பைக்கான தங்களது அணியை இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான பென் ஸ்டோக்ஸ் இடம்பெறவில்லை. பென் ஸ்டோக்ஸ் தற்போது தனது கை விரல் காயம் காரணமாகவும், மனநலத்திற்காகவும் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதேநேரத்தில் அக்டோபர் 10ஆம் தேதி வரை அணியில் மாற்றம் செய்யலாம் என்பதால், பென் ஸ்டோக்ஸை அணியில் சேர்ப்பது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பின்னர் முடிவு செய்யவுள்ளது. அதேபோல் இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், டெஸ்ட் அணி கேப்டனுமான ஜோ ரூட் இருபது ஓவர் அணியில் இடம்பெறவில்லை.

 

இருபது ஓவர் உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணி வருமாறு: இயான் மோர்கன், மொயீன் அலி, பரிஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், சாம் கரன், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலன், டைமல் மில்ஸ், அடில் ரஷித், ஜேசன் ராய், டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்.

 

 

Next Story

நாடு திரும்பிய சென்னையின் ஆல் ரவுண்டர்

Published on 21/05/2023 | Edited on 21/05/2023

 

The all-rounder of the Chennai team returned to the country

 

சென்னை அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் நாடு திரும்பியுள்ளார்.

 

நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை அணியால் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ரூ.16.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அவரது இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் பாதியில் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துவார் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அவருக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ரஹானே முதல் போட்டியில் இருந்து அதிரடியாக ஆட சென்னை அணியின் நிர்வாகம் மற்றும் மக்களின் பார்வை ரஹானே பக்கம் திரும்பியது. இதனிடையே அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ரஹானே ஃபார்ம் காரணமாக பென் ஸ்டோக்ஸ் 2 போட்டிகளில் மட்டும் களமிறக்கப்பட்டு எஞ்சிய போட்டிகளில் களமிறக்கப்படாமல் வைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் வரும் ஜூன் மாதம் 1 ஆம் தேதி அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற இருப்பதால் அதற்கு தயாராவதற்காக பென் ஸ்டோக்ஸ் தாயகம் திரும்பியுள்ளார். அயர்லாந்து உடனான டெஸ்ட் போட்டி முடிந்ததும் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா உடன் ஆஸிஸ் போட்டியில் விளையாட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

ஆண்டுக்கு ரூ. 50 கோடி; இங்கிலாந்து வீரர்களிடம் பேரம் பேசிய ஐபிஎல் உரிமையாளர்கள்

Published on 27/04/2023 | Edited on 27/04/2023

 

50 crore per annum; IPL teams who negotiated with English players

 

ஐபிஎல் உரிமையாளர்கள், 6 இங்கிலாந்து கிரிகெட் வீரர்களிடம் தங்கள் அணிகளில் விளையாட ஆண்டுக்கு ரூ.50 கோடி பேரம் பேசியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  

 

தற்போதைய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 கிரிக்கெட் அணிகளை வாங்கி வருகின்றனர். இந்நிலையில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், 6 இங்கிலாந்து வீரர்களை அணுகி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் கவுண்டி கிரிக்கெட்களில் இருந்து விலகி முழுவதுமாக தங்கள் ஐபிஎல்லில் சேர்ந்து விளையாட தொடக்க நிலை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். வீரர்களிடம் ஆண்டுக்கு ரூ.50 கோடி ஊதியமாக பேசியுள்ளதாகவும் லண்டன் டைம்ஸ் இதழ் கூறியுள்ளது.

 

இருப்பினும் எந்த அணிகளின் உரிமையாளர்கள் இம்முயற்சியில் ஈடுபட்டனர், அவர்கள் அணுகிய வீரர்கள் யார் என்பன போன்ற விபரங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.  கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்), தென்னாப்பிரிக்காவின் டி20 லீக், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடைபெறும் குளோபல் டி20 லீக் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் மேஜர் லீக் டி20 போன்ற பல லீக்குகாள் உலகம் முழுதும் நடைபெறும் சூழலில் ஐபிஎல் அணிகள் இம்முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு லீக்கிலும் தங்கள் அணிகளின் பலத்தினை உறுதி செய்யவும் வீரர்களின் இருப்பை உறுதி செய்யவும் இப்புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.