மான்செஸ்டரில் புதன்கிழமை நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில், தோனி தனது ஓய்வை அறிவிக்கலாம் என்ற செய்திகள் பரவி வருகிறது.

Advertisment

dhoni rested for west indies cricket tournament

இந்நிலையில் தோனி இன்னும் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை எனவும், அவரது வார்த்தைக்காக தான் காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அடுத்த மாதம் இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. அங்கு செல்லும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டி, இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது.

Advertisment

இதற்கான அணி தேர்வு, வரும் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் தோனிக்கு ஓய்வளிக்கப்பட உள்ளதுஎனதெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்கோலி, பும்ரா, ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோருக்கும்ஓய்வளிக்கப்பட உள்ளது. இந்த தொடரில்ரோஹித் சர்மா இந்தியஅணியின் கேப்டனாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.