deepak chahar - msd

Advertisment

ஐபிஎல் தொடரில் நேற்று (07.10.2021) சென்னை - பஞ்சாப் அணிகள் மோதின. ஏற்கனவே ப்ளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறிவிட்ட சென்னை அணி விளையாடும் கடைசி லீக் போட்டியாக இது அமைந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தீபக் சாஹர், தனது காதலிக்கு மோதிரம் அளித்து தனது காதலை வெளிப்படுத்தினார்.

அவரது காதலியும் அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தீபக் சாஹருக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், தோனியின் அறிவுரைப்படி தீபக் சாஹர், தனது காதலியிடம் முன்கூட்டியே 'ப்ரொபோஸ்' செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபக் சாஹர், ப்ளே-ஆஃப்ஸ் சுற்றின்போது தனது காதலியிடம் 'ப்ரொபோஸ்' செய்ய திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, ப்ளே-ஆஃப்ஸுக்கு முன்னரே தீபக் சாஹரை அவரது காதலியிடம் ப்ரொபோஸ் செய்யச் சொன்னதாகவும் அத்தகவல் தெரிவிக்கிறது.