Skip to main content

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு - ஸ்டெய்ன் அறிவிப்பு!

Published on 31/08/2021 | Edited on 31/08/2021

 

dale steyn

 

உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த டேல் ஸ்டெய்ன் அனைத்து வகையான கிரிக்கெட்லிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஸ்டெய்ன் டெஸ்ட் போட்டிகளில் 439 விக்கெட்டுகளையும், ஒருநாள் போட்டிகளில் 196 விக்கெட்டுகளையும், இருபது ஓவர் கிரிக்கெட்டில் 64 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 400 விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் ஸ்டெய்னிடம்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டெய்னின் அதிவேக பந்துவீச்சில் அசந்துபோன ரசிகர்கள் அவர் ஸ்டெய்- கன் (steyn -gun) என அழைத்தனர். ஸ்டெய்ன் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

ஓய்வு முடிவை வெளியிட்டுள்ள ஸ்டெய்ன், ரசிகர்கள், சக வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, தனது பயணம் நம்பமுடியாததாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.