Skip to main content

முன்கூட்டியே தொடங்கும் ஐபிஎல் : பிசிசிஐ - அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

Published on 22/01/2022 | Edited on 22/01/2022

 

bcci

 

2022ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரை வரும் ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஆனால், கரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஐபிஎல் தொடர் திட்டமிட்டபடி நடக்குமா எனச் சந்தேகம் எழுந்துள்ளது. இந்தநிலையில் ஒருவேளை ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்த முடியாவிட்டால் எங்கு நடத்துவது என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்களுடன் இன்று பிசிசிஐ ஆலோசனை நடத்தியது.

 

இந்த கூட்டத்தில் தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், மும்பை ஆகிய இடங்களில் ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகவும், அதில் மும்பையில் ஐபிஎல் தொடரை முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வான்கடே மைதானம், கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (சிசிஐ) மைதானம், டிஒய் பாட்டீல் மைதானம் ஆகியவற்றில் போட்டிகள் நடைபெறும் எனவும், மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 

மேலும் ஐபிஎல் தொடரை மார்ச் 27 ஆ தேதி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள பிசிசிஐ வட்டாரங்கள், தொடரை மகாராஷ்ட்ராவில் நடத்துவது குறித்த இறுதி முடிவு, அம்மாநிலத்தில் நிலவும் கரோனா சூழ்நிலையை கவனத்தில் கொண்டு பிப்ரவரி 20 ஆம் தேதி எடுக்கப்படும் என பிசிசிஐ அணி உரிமையாளர்களிடம் கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளன. முன்னதாக ஐபிஎல் தொடரை ஏப்ரல் 2 ஆம் தேதி தொடங்க பிசிசிஐ முடிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

அதேபோல் இந்த கூட்டத்தில், ஐபிஎல் ஏலம், திட்டமிட்டபடி பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் பெங்களூரில் நடைபெறும் எனவும் பிசிசிஐ அணி உரிமையாளர்களிடம் தெரிவித்ததாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறியுள்ளன. 

 

 

 

Next Story

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம்!

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
Gautam Gambhir appointed as coach of Indian cricket team

டி-20 உலகக்கோப்பை 2024 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை வென்றது. இதனையடுத்து இலங்கைக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 27 ஆம் தேதி முதல் 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த கிரிக்கெட் தொடரில் இருந்து கம்பீர் இந்த பொறுப்பை ஏற்பார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இது குறித்து கவுதம் கம்பீர் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “இந்தியா எனது அடையாளம். எனது நாட்டிற்குச் சேவை செய்வது எனது வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாகும். கிரிக்கெட்டில் தற்போது வித்தியாசமான தொப்பி அணிந்தாலும், கிரிக்கெட் விளையாட்டிற்குத் திரும்பி வந்ததில் பெருமைப்படுகிறேன். ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்பதே எனது குறிக்கோள். 1.4 பில்லியின் இந்தியர்களின் கனவுகளை நனவாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Gautam Gambhir appointed as coach of Indian cricket team

இது தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் கௌரவ செயலாளர் ஜெய்ஷா தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீரை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது கிரிக்கெட் வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது. மேலும் கௌதம் இந்த மாறிவரும் சூழலில் அருகில் இருந்து பார்த்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் நெருக்கடிகளைச் சகித்துக்கொண்டு, பல்வேறு நேரங்களில் சிறந்து விளங்கியதால் இந்திய கிரிக்கெட்டை முன்னோக்கி வழிநடத்த கௌதம் சிறந்த நபர் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

இந்திய அணிக்கு பரிசுத்தொகை வழங்கி கவுரவித்த பிசிசிஐ!

Published on 04/07/2024 | Edited on 05/07/2024
BCCI honored the Indian team with prize money

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் மேற்கிந்திய தீவுகளின் பார்படாஸில் இருந்து தனி விமானத்தில் இன்று (04.07.2024) காலை டெல்லி வந்தனர். அப்போது டெல்லி விமான நிலையத்தின் வெளியே திரளாக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு காலை 11 மணியளவில் பிரதமர் மோடி காலை உணவளித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை  வந்தடைந்தனர். அப்போது இந்திய அணியினர் வந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் (WATER SALUTE) அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணி தனது வெற்றி அணிவகுப்பை மும்பையில் தொடங்கியது. டி20 உலகக் கோப்பை சாம்பியன்களைக் காணத் திரண்டிருந்த கிரிக்கெட் ரசிகர்களின் கடல் அலைகளுக்கு இடையே இந்த அணிவகுப்பு பேருந்து சென்றது. இந்திய கிரிக்கெட் அணியின் வருகைக்காக மும்பை மரைன் டிரைவில் மக்கள் மற்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இந்திய அணியின் வெற்றி அணிவகுப்பு மரைன் டிரைவிலிருந்து வான்கடே மைதானம் வரை நடைபெற்றது. 

BCCI honored the Indian team with prize money

தங்கள் வெற்றி அணிவகுப்பில் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டி 20 உலகக் கோப்பையை உயர்த்திக் காட்டினர். இந்திய அணியினரின் வெற்றி அணிவகுப்புக்குப் பிறகு அவர்களின் பேருந்து மும்பை வான்கடே மைதானத்திற்குள் நுழைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நடனமாடினர்.

இந்நிலையில் மும்பை வான்கடே மைதானத்தில் இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய்க்கான காசோலையை பிசிசிஐ அதிகாரிகள் வழங்கினர். முன்னதாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்ற பிறகு இந்தியா அணிக்கு ரூ.125 கோடியை பரிசுத் தொகையாக பிசிசிஐ அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து மும்பை வான்கடே மைதானத்தில் இருந்து இந்திய அணியினர் தாஜ் ஹோட்டலுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதற்கிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை மும்பை கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ.) அதிகாரிகள் வரவேற்றது குறிப்பிடத்தக்கது.