ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 195 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிட்னியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக மேத்யூ 58, ஸ்மித் 46, ஹென்ரிக்யூஸ் 26, மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தனர். அதேபோல் இந்திய அணி தரப்பில் நடராஜன் 2, சாஹல், ஷர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியஇந்திய அணி விளையாடி வருகிறது.