முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, இந்தியாவுக்கு 289 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது ஆஸ்திரேலிய அணி. சிட்னியில் நடைபெறும் இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் இரு வீரர்கள் உடனடியாக பெவிலியன் திரும்பினார்கள், அவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அனைவரும் நிதானமாக ஆடி 50 ஓவர்களுக்கு 5 விக்கெட் இழப்புக்கு 288 ரன்களை சேர்த்துள்ளது ஆஸ்திரேலியா.
அதிகபட்சமாக ஆஸி வீரர் ஹெண்ட்ஸ்காம்ப் 73, உஸ்மான் கவாஜா 59 ரன்கள் எடுத்துள்ளனர்.