Published on 18/01/2022 | Edited on 18/01/2022

கரோனா பரவல் காரணமாக 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும், ஐபிஎல் அணி நிர்வாகங்கள் தங்கள் அணியைக் கட்டமைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்தாண்டு முதல் ஐபிஎல் தொடரில் புதிதாக களமிறங்கவுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் ஏலத்திற்கு முன்னதாகவே மூன்று வீரர்களை ஒப்பந்தம் செய்யலாம் என்பதால், இரு அணிகளும் அதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்தநிலையில் அகமதாபாத் அணி, ஹர்திக் பாண்டியாவையும், ரஷித் கானையும் 15 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல் அந்த அணி சுப்மன் கில்லை 7 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹர்திக் பாண்டியா, அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.