Afghanistan beat Pakistan and won

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக் கோப்பையின் லீக் சுற்று போட்டி இன்று நடைபெற்றது. இதில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

Advertisment

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 283 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணியில், கேப்டன் பாபர் அசாம் 92 ரன்களும், அப்துல்லா சாஃபீக் 58 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்தனர்.

Advertisment

தொடர்ந்து 284 எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் இணை பாகிஸ்தான் அணியின் பந்துகளை பவுண்டிரிகளுக்கு விளாசினர். இந்த இணை 130 ரன்களை குவித்தது. இதில், ரஹ்மானுல்லா குர்பாஸ் 53 பந்துகளில் 65 ரன்களும், இப்ராஹிம் சத்ரான் 113 பந்துகளில் 87 ரன்களும் எடுத்தனர். அதேபோல், அடுத்து களமிறங்கிய ரஹமத் ஷா 84 பந்துகளில் 77 ரன்களும், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி 45 பந்துகளில் 48 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 49 ஓவர்களில்286ரன்களை எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.